Wednesday, March 3, 2010

இலங்கையில் தோல்வி காரணம் யார்?

இலங்கை தமிழர்கள் பிரச்சினை: 
       இலங்கையில் நடந்து முடிந்த போரில் தமிழர்கள் தோல்வி என்பதை விட படுகொலைகள், நெஞ்சை உருக்கும் காட்சிகள், என்பதும் இதில் சிலர் மவுனமாகவும், சிலர் ஆவேசமாகவும் இருக்கும் இந்த பிரச்சினையில், கருத்து தெரிவிப்பதோ அல்லது உண்மை எது? தவறு யார் மீது? என  புலப்படுவதை அறிவிப்பதோ யாரையும் புண்படுத்தலாம் அல்லது கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் அமைதியாக இருப்பதே நல்லது என்ற போதிலும், சிலர் தங்கள் உணர்ச்சிகளின் படி வரும் அரிப்பை கொட்டி தீர்ப்பதால்... பதில் விளக்கம் என்பதும், நியாயமாக படும் எண்ணங்கள் கருத்து சுதந்திரம் என்ற உலகத்தில் வைத்தே ஆகவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.          
போரைப்பற்றி:
       இலங்கையில் நடைபெற்றது இலங்கை என்ற சாதாரண நாடு கிட்டதட்ட ஆசியாவின் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன், மிகப்பெரிய ஆயுதப்பலத்துடன் தங்கள் நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருவோரை அழிப்பதாக கூறி போர் புரிந்து, வெற்றி பெற்றதுடன், இலங்கை தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய அழிவுகளையும் ஏற்படுத்திவிட்டது 
போர் குற்றசாட்டுக்கள்:  
இது இலங்கை அரசின் மீதல்ல இந்தியாவின் பலர் மீது. இலங்கை அரசினர் பற்றியோ கூற வேண்டிய அவசியமில்லை, அவர்கள் மனிதர்களா? அல்லது மிருகங்களா? என்று ஆராய அவசியமில்லை... ஆனால் இந்தியா, இந்திய அரசு (இன்னும் கூ ரவேண்டுமானால்) காங்கிரஸ் அரசு (ராஜீவ் காந்தியை கொன்றதால் பழிவாங்கி விட்டதாக சிலர் குற்றசாட்டு), தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.கா அரசு இவை போரை தடுத்து நிறுத்த வில்லை என்றும் மக்களை கொன்றழித்துவிட்டதாக மிகப்பெரிய பழி.
இவ்வளவு மக்கள் பலிக்கு யார் யார் காரணம்?  
போரை நிறுத்தக்கோரி இந்திய அரசை நோக்கி விடப்பட்ட கோரிக்கை மறைமுகமாக நிராகரிக்கப்பட்டது. உலகமும் கண்டுகொள்ள வில்லை 
காரணங்கள் என்ன:  
இந்திய அரசுக்கு எதிராக, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஆவேச குரல் கொடுத்தவர்கள் மிக்க மனிதாபம் உள்ளவர்களும் அல்ல  மவுனமாக இருந்தவர்கள் மனிதாபிமானமற்றவர்களும் அல்ல.  ஆவேசமாக கத்தியவர்கள் 
தங்கள் மனிதாபிமானத்தை காட்ட இலங்கையில் மட்டுமல்ல தங்களுக்கு அருகில்  அல்லது பக்கத்து வீட்டிலேயே நிறைய வாய்ப்புக்கள் இருந்திருக்கும். இவர்கள் மட்டும் கண்டுகொள்வார்களா?  மனிதாபி மானம் தமிழர்கள் மீது மட்டும் வராது. அப்படி இருந்தால் அது மொழி வெறி. சிலருக்கு மட்டும் ஆவேசம் என்றால், ஒன்று யாரையோ தங்கள் ஹீரோவாக ஏற்றிருப்பார், அவருக்கு தோல்வி என்பதால் வரும் ஆத்திரம் அல்லது அவர்கள் அறியாமை என்றே கூற வேண்டும்  

அடித்து சொல்லலாம் இந்தியத்தலைவர்களோ, உலகத்தைவர்களோ ஒருவர் கூட பிஞ்சு குளைந்தைகளோ, மக்களோ பலியாவதில் விருப்பமோ, சந்தோசமோ கண்டிப்பாக இருந்திருக்காது. ஆனால் அவர்கள் சிக்கலுக்குள்ளக்கப்பட்டனர் 


ஆவேச காரளுக்கு ர்கசில கேள்விகள்
1 ஆவேச காரர்கள் ஏன் இந்திய அரசை பார்த்து மட்டும் கோரிக்கை எழுப்பினார்கள்?
புலிகளுக்கு எந்த கோரிக்கையும் இல்லையா? 
(இந்திய அரசு கோரிக்கை விடுத்தாலும் கூட அதை நிராகரிக்க இலங்கை முடியும். இந்தியா வேறு நாடு, இலங்கை வேறு நாடு. இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலம் அல்ல. சீனா, பாகிஸ்தான் நாடுகளின் முழு ஒத்துழைப்பும் இலங்கைக்கு இருந்தது)       


2 மக்களை காப்பாற்றுங்கள் என்று மட்டுமே கோரிக்கை இருந்தது அதில் விடுதலைபுலிகளும் அடக்கமா? அப்படியானால் விடுதலைப்புலிகள் ஏன் கோரிக்கை வைக்க வில்லை? 


3  மக்களில் ஒருவர் கூட பலியாகாமல் விடுதலைபுலிகளை மட்டும் எதிர்த்து போரிட இந்தியா கோரிக்கை விடுகிறது என்றால் சம்மதித்திருப்பீர்களா? 


3 மக்களும் புலிகளும் ஒன்றா? குண்டு வைக்கும் போதும்,  தீவிர வாத செயல்களில் ஈடுபடும்போதும்  அவர்கள் யாரிடமும் கேட்டு செய்ய மாட்டார்கள், அல்லது  தமிழர்களிடம் அனுமதி கேட்டு செய்தார்களா? அல்லது ஆவேசக்காரர்களிடம் கேட்டு செய்தார்களா? 
(யாரிடம் கேட்டு செய்ய வேண்டியதில்லை ஏனென்றால் அவர்கள் அப்போது தீவிரவாதிகள், தோல்வியுறும்போது மக்களாகி விடுவார்கள்)        


4 புலிகளையும் காப்பாற்றுங்கள் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை?   வைக்க முடியவில்லை?   
(இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் விடுதலை புலிகள் அமைப்பு ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம்.)
         
உலகம் முழுவதும் அறியும்.. இந்த கோரிக்கைக்குள்ளும் இருக்கும் தந்திரம்.. ஆனால் அப்பாவி மக்கள் பலியானது, வீட்டுக்குள் இருந்த மக்களை காட்டுக்குள் அழைத்து சென்று பிணைக்கைதிகளாக வைத்து உலகத்தை பார்த்து போரை நிறுத்த, இலங்கைக்கு, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க பயன்படுத்திய புலிகள் தான் மிகப்பெரிய காரணம்..  அவர்கள் நினைத்திருந்தால் மக்களில் ஒருவர் கூட பலியாகாமல், தாங்கள் மட்டும் போரிட்டு சென்றிருக்கலாம்.. 

No comments: